பாட்டியல் - நூற்பா எண் 147

335


 

     ஒருகை மார்பொடு விளங்க’                 - திருமுருகு. 112

 

  எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாற்றானும்,

 

    ‘கடுத்துவர்த்த தேனும் கடும்பிணிதீர்த் தின்பம்

    கொடுத்ததுபோல் யானுரைத்த கோவை - எடுத்துணந்தோர்

    பொய்ப்பொருள்யா வுந்தெளிந்து போக்கியபின் றாக்காணும்

    மெய்ப்பொருளான் எய்துவார் வீடு’

 

 என்பதனானும் பிறவாற்றானும் அறிக.

 

     ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையின்

     அடக்கிய மூக்கி னவர்.’             - தொல். பொ. 491. பே.

 

  என்பதனுள் குஞ்சரம் என்பது குறிப்புமொழி எனக் காட்டின், ஆகாது;
அது பாட்டிடை வைத்த குறிப்பாய் அடங்குதலின், இத்துணையும் படலத்து
ஒழிபு கூறி இனிப் பிண்டத்து ஒழிபு கூறுகின்றார்.   
                                                  (147)

 

விளக்கம்

 

     உபதேச வாயிலாக உணரப்படும் மந்திரம் சொல்லைக் கருவியாக
உடையது. குறிப்புமொழி சொல்லையும் கடந்து மனத்தான் உணரப்படுவது.
ஞானாசாரியனுடைய சிந்முத்திரையாகிய பொருளை உள்ளவாறு உணரும்
மாணாக்கர் அதன் வாயிலாக அவன் கூறும் செய்திகளை உணர்வர் என்பது.

 

     ‘வருகோவைச் சூடி’ என்பதன் பொருள்: கங்கையைச் சூடித்
திகம்பரனாய் இடபம் ஏறிச் சுவர்க்க இன்பத்தைத் தரும் தலைவனுடைய 
சிந்முத்திரையாகிய அபிநயத்தை ஆய்ந்து ஆசிரியர்கள் உத்தம சீடருக்கு
அதனைத்தாம் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமல்
சொல்லினர்.  அதனை அறியும் ஆற்றல் இலாதாருக்கு இந்நூலை ஆய்ந்து
இயற்றி உள்ளனர் என்பது.

 

     ஆசிரியர் தந்துள்ள விளக்கமும் நோக்கி இன்புறுக.