பாட்டியல்
- நூற்பா எண் 147, 148 |
337 |
ஒத்த
நூற்பா
முழுதும்
- தொல். பொ. 491. பே.
147
மரபு
வகை
908.
வழக்கு மரபும் செய்யுள் மரபும்என்று
இழுக்கில் மரபுஓர் இருவகைத்து ஆகும்.
இது
மரபு இத்துணைத்து என்பதூஉம், அவை இவை என்பதூஉம்
கூறுகின்றது.
இ - ள்: வழக்கிடத்து உளவாகிய மரபும், செய்யுளிடத்து
உளவாகிய மரபும் என மரபு இலக்கணம் இருவகையினை
உடைத்து என்றவாறு.
(148)
விளக்கம்
வழக்குமரபு செய்யுள்மரபு - இவற்றிடை ஒற்றுமையும்
வேற்றுமையும்
உண்மை நூல்முழுதும் நோக்கிக் காண்க.
வழக்கிற்கே உரியவாகிச் செய்யுளுக்கு ஏலாதனவும்
உள. செய்யுட்கே
உளவாகி வழக்கிற்கு ஏலாதனவும் உள.
இவ்விரண்டற்கும் பொது ஆவனவும்
உள என்பனவற்றைக் குறித்துக் காண்க.
148
வழக்கு
இலக்கணம்
909.
அவற்றுள்,
வழக்கெனப் படுவது
உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்டு ஆக லான.
இது
வழக்காமாறு கூறுகின்றது.
இ - ள்: முற்கூறிய இரண்டனுள் வழக்கு என்று சிறப்பித்துச்
சொல்லப்படுவது உயர்ந்தோர் இடத்தாம்; தோன்றுதல்
அவரிடத்து ஆகலான்
என்றவாறு.
|