338 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
உயர்ந்தோராவார் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும்
தலைச்சங்கத்தாரும் முதலியோர்.
(149)
விளக்கம்
‘அவரையே நோக்குதல் என்பது, அவர் ஆணையான் உலக நிகழ்ச்சி
செல்கின்றது என்றவாறு; எனவே உயர்ந்தோர்
எனப்படுவார் அந்தணரும்
அவர்போலும் அறிவுடையோரும்
ஆயினார்’ என்பது பேராசிரியர் உரை.
‘உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு படுதலின்
வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே.’
- தொ. பொ. 217 நச்.
‘உயர்ந்த மக்கள் கூறும் கூற்றும் வேதநெறியோடு
கூடுதலின்
அவ்வழக்கினது நெறியாலே நடத்தல் செய்யுட்கு
முறைமை என்றவாறு.
‘வழக்கெனப்படுவது (647) என்ற மரபியல் சூத்திரத்தான்
வழக்கு
உயர்ந்தோர் கண்ணதாயிற்று. அவர் அகத்தியன்
முதலியோர் என்பது
பாயிரத்துள் கூறினாம்’ என்பது நச்சினார்க்கினியர் உரை.
ஒத்த
நூற்பா
முழுதும்
- தொல். பொ. 647. பே.
149
இளமை
மரபு பெயர்கள்
910.
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்
குழவியும் என்றிவை இளமைப் பெயரே.
இது
வழக்குமரபு உணர்த்துவனவற்றுள் இளமைக்கு உரியன இவை
என்கின்றது.
|