340 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
ஓரறிவுயிரில் பைங்கூழும்
பசும்புல்லும் இவ்விளமைப்பெயர் எய்தா
என்பதாம். இவை
எல்லாம் சொல்பற்றி வந்த மரபு ஆகலின்
சொல்லோத்தில் கூறிய
மரபுள் அடங்கா என்க.
(150)
விளக்கம்
பார்ப்பு, பிள்ளை:
‘பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை.’
- தொல். பொ. 559
‘தவழ்பவை
தாமும் அவற்றோ ரன்ன.’
’’ 560
பறழ், குட்டி :
‘மூங்கா வெருகுஎலி மூவரி அணிலொடு
ஆங்கவை நான்கும் குட்டிக்கு
உரிய..’
’’ 561
‘பறழ் எனப் படினும் உறழ்
ஆண்டு இல்லை.’
’’ 565
குருளை, குட்டி, பறழ் :
‘நாயே
பன்றி புலிமுயல் நான்கும்
ஆயுங் காலை குருளைக்கு உரிய.’
’’ 563
‘நரியும் அற்றே நாடினர்
கொளினே.’
’’ 564
‘குட்டியும் பறழும் கூற்றவண்
வரையார்.’
’’ 565
பிள்ளை :
‘பிள்ளைப்
பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை
கொள்ளுங் காலை நாய்அலங்
கடையே.’
’’ 566
மறி, குட்டி :
‘யாடும் குதிரையும்
நவ்வியும் உழையும்
ஓடும்
புல்வாய் உளப்பட மறியே.’
’’ 567
‘கோடு வாழ் குரங்கும்
குட்டி கூறுப.’
’’ 568
|