பாட்டியல்
- நூற்பா எண் 150 |
341 |
மகவு,
பிள்ளை, பறழ், பார்ப்பு :
‘மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன அப்பா லான.’
- தொ. பொ. 569
கன்று
:
‘யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
ஆனோடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.’
’’ 570
‘எருமையும் மரையும் வரையார் ஆண்டே.’
’’
571
‘கவரியும் கராமும் நிகர்அவற் றுள்ளே.’
’’ 572
‘ஒட்டகம் அவற்றோடு ஒருவழி நிலையும்’
’’
573
குழவி
:
‘குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.’
’’ 574
‘ஆவும் எருமையும் அவைசொலப் படுமே.’
’’ 575
‘கடமையும் மரையும் முதல்நிலை ஒன்றும்.’
’’
576
‘குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின் அப்பெயர்க்கு உரிய.’
’’ 577
குழவி,
மக, பிள்ளை :
‘குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை
கிழவ அல்ல மக்கட் கண்ணே.’
’’ 578
‘கிழவ அல்ல’ என்ற மிகையான் பிள்ளையும்
கொண்டார் பேராசிரியர்.
பிள்ளை,
குழவி, கன்று, போத்து :
‘பிள்ளை குழவி கன்றே போத்தென
கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே.’
’’
579
‘நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே.’
’’
580
சொற்கள் இப்படி வரையறையோடு வழங்கப்படல்
வேண்டும்
என்பதனை மரபையே அடிப்படையாகக் கொண்டு
கூறலின் இந் நூற்பா
முதலியன சொல்லோத்தினுள்
இடம்பெறவில்லை.
|