342 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
ஒத்த
நூற்பாக்கள்
‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்
........... ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே.’
- தொல். பொ. 556
150
இளமை
மரபுபெயருக்குப் புறனடை
911.
சொல்லிய மரபின் இளமை தானே
சொல்லுங் காலை அவையல இலவே.
இது
மேலதற்கு ஒரு புறனடை கூறுகின்றது.
இ - ள்: கூறப்பட்ட மரபு இலக்கணம் எய்தி நின்ற
இளமைப் பெயரைச்
சொல்லுமிடத்து அப்பெயர்களே அன்றி
வேறுசில பெயர்கள் இல்லை என்றவாறு
(151)
விளக்கம்
இப்புறனடைச் சூத்திரத்தால் முன்பு விதந்து
சொல்லப்படாது இன்னும்
வழக்கினுள் காணப்படும் நாகு
என்ற இளமைப் பெயர்,
‘நன்னாள் பூத்த நாகிள வேங்கை’
- அகநா. 85
எனவும்,
‘நாகிள வளை’
-
புறநா. 266
எனவும்,
‘கணைக்கோட்டு
வாளைக் கமஞ்சூல் மடநாகு’
- குறுந். 164
எனவும்,
‘எருமை
நல்லான் மடநாகு பெறூஉம்’
- பெரும்பாண். 165
எனவும்,
ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர்காறும் இளமைப்பெயராய்
வழங்குதல் முதலியன
கொள்ளப்படும் என்பார் பேராசிரியர்.
(தொல். பொ. 581 பே.)
|