பாட்டியல் - நூற்பா எண் 151, 152

343


 

ஒத்த நூற்பா

  முழுதும் - தொல். பொ. 581 பே

 151

 

  அறுவகை அறிவுகள்

 

912. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே;

    இரண்டறி வதுவே அதனொடு நாவே;

    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே;

    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே;

    ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே;

    ஆறறி வதுவே அவற்றொடு மனன்என

    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தனரே.

 

இஃது உயர்ந்த ஒழுக்கமும் அல்லவாகிய ஒழுக்கமும் நிகழ்தற்கு ஏதுவாகிய
அறிவின் திறம் கூறுகின்றது.

 

     இ - ள்: ஓரறிவாவது தன்னின் வேறாய பிறிதொன்று மெய்யுறலான்
வன்மை மென்மை முதலியன அறிதலாம்; இரண்டறிவாவது அதனொடு
வாயால் சுவையை அறிதலாம்; மூவறிவாவது அவ்விரண்டு அறிவுடனே
மூக்கால் கந்தத்தினை அறிதலாம்; நான்கறிவாவது அம்மூவகை அறிவுடனே
கண்ணால் உருவத்தினை அறிதலாம்; ஐந்தறிவாவது அந்நால்வகை
அறிவுடனே செவியால் சத்தத்தினை அறிதலாம்; ஆறறிவாவது ஐவகை
இந்திரியங்கள் அறியும் அறிவான் அன்றி ஞாபக ஏதுக்களான் நுண்ணிய
பொருள்களை மனத்தான் உணர்தலாம்; என்று நேர்மையான் எல்லாப்
பொருள் மரபினையும் உணர்ந்தோர் இவ்வாறு பிறழாமல் கூறுக என்று
காட்டினார் என்றவாறு.   
      
                  

 (152)