344
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
விளக்கம்
நிலம் நீர் தீ வளி விசும்பு என்ற ஐந்தும் கலந்த
மயக்கம் உலகம்
ஆதலின் உலகப்பொருள்களை உள்ளவாறு
அறிதற்கு ஐந்து பூதங்களையும்
உணரும் ஆற்றல் வேண்டும்.
நிலத்தின் தன்மை மணம்; அதனை நுகர்வது மூக்கு;
நீரின் தன்மை
சுவை; அதனை நுகர்வது நா; தீயின் தன்மை
ஒளி; அதனை உணர்வன கண்;
வளியின் தன்மை ஊறு; அதனை
உணர்வது தோல்; வானத்தின் தன்மை
ஒலி; அதனை உணர்வன
செவி; எனவே மெய் வாய் கண் மூக்கு செவி
என்ற ஐம்பொறிகளும்
முறையே ஊறு, சுவை, ஒளி, மணம், ஓசை என்பனவற்றை உணர்வனவாம்.
பொதிகமான உலகைக் கடந்த
பொருள்களையும் அறியும்
ஆற்றல் உடையது மனம். மனத்தை உடையவனே
மனிதன் என்ப.
ஞாபகம் - அறிவான் அறிதல்; ஏது - காரணத்தான்
உணர்தல்.
ஒத்த
நூற்பா
முழுதும்
- தொல். பொ. 582. பே.
(இந்நூற்பா உரையில் மனஉணர்வு பொறிஉணர்வு
இவற்றைப்பற்றிப்
பேராசிரியர் விரிவாகக் கூறியுள்ளார்.)
152
அறுவகை
அறிவுபெறும் உயிர்கள்
913.
புல்லும் மரனும், முரளும் நந்தும்,
சிதலும் எறும்பும்,
ஞெண்டும் தும்பியும்
மாவும் மக்களும், மேவும்அவ் வறிவே.
இது
மேற்கூறிய ஓரறிவு முதல் ஆறறிவளவும் உறும் உயிர்கள்
இவைஎனத்
தொகுத்து உணர்த்துகின்றது.
|