346                      இலக
346

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     ‘நந்தும் முரளும் ஈரறி வினவே;

     பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’                    

 - தொல். பொ. 584

  

     ‘சிதலும் எறும்பும் மூவறி வினவே;

     பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’                         

  ’’      585

  

     ‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே;

     பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’                          

’’      586

  

     ‘மாவும் மாக்களும் ஐயறி வினவே;

     பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’                          

’’      587

  

     ‘மக்கள் தாமே ஆறறி வுயிரே;

     பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.’                          

 ’’      588

                                                                      153

 

                                       

புறனடை

 

914. அக்கிளைப் பிறப்பும்அவ் வறிவுறும் என்ப.

 

இது மேலனவற்றிற்கு ஒருபுறனடை கூறுகின்றது.

 

     இ - ள்: மேற்கூறிய அறுவகை அறிவுறும் உயிர்கட்கு உரிய கிளையும் பிறப்பும் அவ்வவ்வறிவுபெறும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

   (154)

 

விளக்கம்

 

 ஓரறிவு :

 

  கிளை     -   புதலும் கொடியும் போல்வன.

  பிறப்பு     -  மக்கட்குழவியும் விலங்கின் குழவியும் ஓரறிவின

               வாகிய பருவமும், என்பில் புழுவும் முதலியன.

 ஈரறிவு :

 

  கிளை     -  கிளிஞ்சிலும் முற்றிலும் முதலாகிய கடல்வாழ்

               சாதியும் பிறவும்.

  பிறப்பு     -  மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் ஈரறிவாகிய

               பருவம்.