348                                  இலக
348 

இலக்கண விளக்கம் பொருளதிகாரம்


  

சிறப்பு விதி

 

914.  ஒருசார் விலங்கும் அதுஎன மொழிப.

 

இஃது ஒருசார் மாவிற்கு எய்தும் சிறப்புக் கூறுகின்றது.

 

     இ - ள்: மக்கள் யாக்கையில் பிறந்து ஆறறிவு உற்ற உயிரினங்கள்
வினைவயத்தான் விலங்காய்ப் பிறந்துழியும் முன்னை ஆறறிவு உறுதலும் ஒரோவழி
உண்டு என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

(155)
 

விளக்கம்

 

     கசேந்திரன், சடாயு போல்வார் விலங்காகவும் பறவையாகவும் தோன்றினர்
எனினும் பண்டைப் பிறப்பின் நினைவால் மன உணர்வு உடையராயினார் என்பது.

 

     ‘மாடு பற்றி இடங்கர் வலித்திட

     கூடு பற்றிய கொற்றவற் கூயதோர்

     பாடு பற்றிய உணர்வின் பயத்தினால்

     வீடு பற்றிய விலங்கும் விலங்கதோ.’                         

- கிட். வாலி. 115

  

    ‘சிந்தை நல்லறத் தின்வழிச் சேறலால்

     பைந் தொடித்திரு வின்பரி வாற்றுவான்

     வெந்தொ ழில்துறை வீடுபெற் றெய்திய

     எந்தை யும்எரு வைக்கர சல்லனோ.’                         

- கிட். வாலி. 116

                                                                       155

                                                                      

 

ஆண்பால் மரபு பெயர்கள்

 

916. ஏறும் ஏற்றையும் ஒருத்தலுங் களிறும்

    சேவும் சேவலும் இரலையுங் கலையும்

    மோத்தையும் தகரும் உதளும் உம்பலும்

    போத்தும் கண்டியுங் கடுவனும் பிறவும்

    யாத்த ஆண்பால் பெயர்என மொழிப.