பாட்டியல் - நூற்பா எண் 156

349


 

       இஃது அஃறிணை இடத்து ஆண்பாற்கு உரிய மரபுபெயர் இவை எனத்
தொகுத்து உணர்த்துகின்றது.
 
       இ - ள்: ஏறு என்பது முதல் கடுவன் என்பது ஈறாகக் கிடந்தபதினைந்தும் அவைபோல்வன பிறவும் அஃறிணை ஆண்பாற்கு உரியபெயர்களாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

 

அவை உணர்த்துமாறு :

 

     களிறு என்பது வேழத்து ஆணினையும் பன்றி ஆணினையும், ஒருத்தல்
என்பது யானை பன்றி புல்வாய் புலி மான் கவரி கராம் எருமை இவையிற்றின்
ஆணினையும், ஏறு என்பது பன்றி புல்வாய் உழை கவரி எருமை மரை பெற்றம்
சுறா இவையிற்றின் ஆணினையும், போத்து என்பது பெற்றம் எருமை புலி மரை
புல்வாய் மயில் எழாஅல் நீர் வாழ் சாதியுள் அறுவகைப் பிறப்பு இவையிற்றின்
ஆணினையும், இரலையும் கலையும் புல்வாய் முசு இவையிற்றின் ஆணினையும்,
மோத்தையும் தகரும் உதளும் உம்பலும் யாட்டின் ஆணினையும், கண்டி
என்பது எருமை ஏற்றினையும், கடுவன் என்பது குரங்கின் ஏற்றினையும் பூஞை
ஏற்றினையும், சேவல் என்பது மயில் அல்லாத சிறகோடு கூடிய பறவை ஆணினையும்,ஏற்றைஎன்பதும்ஆண்என்பதும்எல்லாஆணினையும் உணர்த்தலாம்.

   (156)   

                                                                                   விளக்கம்

  களிறு :

   

    ‘வேழக்கு உரித்தே விதந்து களி றென்றல்

     கேழற் கண்ணும் கடிவரை யின்றே.’                       

- தொல். பொ. 589

 

  ஒருத்தல் :

   

    ‘புல்வாய் புலிஉழை மரையே கவரி

     சொல்லிய கராமோடு ஒருத்தல் ஒன்றும்.’

                    ’’  590