350                      இலக
350

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


   ‘வார்கோட்டு யானையும் பன்றியும் அன்ன.’

-

தொ. பொ. 591

   ‘ஏற்புடைத்து என்ப எருமைக் கண்ணும்.’        

’’

592

 

ஏறு :

 

 

 

   ‘பன்றி புல்வாய் உழையே கவரி

    என்றிவை நான்கும் ஏறுஎனப் படுமே.’ 

’’

593

   ‘எருமையும் மரையும் பெற்றமும் அன்ன.’    

’’

594

   ‘கடல்வாழ் சுறவும் ஏறுஎனப் படுமே.’ 

’’

595

 

போத்து :

 

 

 

   ‘பெற்றம் எருமை புலிமரை புல்வாய்

   மற்றிவை எல்லாம் போத்தெனப் படுமே.’

’’

596

   ‘நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பு உரிய.’ 

’’

597

   (முதலை, இடங்கர், கராம், சுறா, வரால், வாளை.)

   ‘மயிலும் எழாலும் பயிலத் தோன்றும்.’  

’’

598

 

இரலை, கலை :

 

 

 

   ‘இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய.’ 

’’

599

   ‘கலைஎன் காட்சி உழைக்கும் உரித்தே.’  

’’

600

   ‘நிலையிற்று அப்பெயர் முசுவின் கண்ணும்.’        

’’

601

 

மோத்தை, தகர், உதள், அப்பர் : (உம்பல்)

 

 

 

   ‘மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் (உம்பலும்)

    யாத்த என்ப யாட்டின் கண்ணே.’         

’’

602

 

கண்டி :

 

 

 

   ‘எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்’   

’’

623

 

கடுவன் :

 

 

 

   ‘குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்’  

’’

623

    (பூனையைக் கடுவன் என்றல் பிற்கால வழக்கு.)