பாட்டியல் - நூற்பா எண் 156  

  351


 

சேவல் :

   

     ‘சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்

     மாயிருந் தூவி மயிலலங் கடையே.’       

- தொ. பொ. 603

 

ஏற்றை :

 

    ‘ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம்

     ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப.’           

 ’’    604

 

ஆண் :

 

    ‘ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய.’      

 ’’    605

 

ஒத்த நூற்பாக்கள்

 முழுதும் - தொல். பொ. 557 பே.            156

 

பெண்பால் மரபு பெயர்கள்

 

917. பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்

    மூடும் நாகுங் கடமையும் அளகும்

    மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்

    அந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே.

 

இது பெண்ணிற்கு உரிய மரபுபெயர் இவை எனத் தொகுத்து
உணர்த்துகின்றது.

 

     இ - ள்: பேடை முதலாகப் பிடி ஈறாகச் சொல்லப்பட்ட பதின்மூன்றும்
பண்ணினை உணர்த்தும் பெயர்களாம் என்றவாறு.

     அவை உணர்த்துமாறு: பேடை பெட்டை என்பன ஒட்டகம் குதிரை
மரை இவையிற்றின் பெண்ணினையும், புள்ளின் பெண்ணினையும்,
    
     அளகு என்பது கோழி கூகை மயில் இவையிற்றின் பெண்ணினையும்,