352
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
பிணை என்பது புல்வாய் உழை கவரி இவையிற்றின்
பெண்ணினையும்,
பிணவு என்பதும் பிணவல் என்பதும் பன்றி
புல்வாய் நாய் இவையிற்றின்
பெண்ணினையும்,
பிடி என்பது யானைப்பெண்ணினையும்,
நாகு என்பது எருமை மரைபெற்றம் இவையிற்றின் பெண்ணினையும்,
நீர் வாழ்
சாதியுள் நந்தின் பெண்ணினையும்,
மூடு கடமை என்பன யாட்டின் பெண்ணினையும்,
பாட்டி என்பது பன்றி, நாய், நரி இவையிற்றின்
பெண்ணினையும்,
மந்தி என்பது குரங்கு முசு ஊகம் இவையிற்றின் பெண்ணினையும்
உணர்த்தலாம்.
‘அந்தஞ் சான்ற’ என்பதனால் கோட்டான் என்பதும்,
தத்தை என்பதும், ஏனம்
என்பதும் முறையே
பொதுவாய்க் கூகையினையும், கிளியினையும், பன்றியினையும்
உணர்த்துதல் கொள்க.
(157)
விளக்கம்
பெட்டை
- பெடை, பேடை :
‘ஒட்டகம் குதிரை கழுதை மரைஇவை
பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய.’
-
தொ. பொ. 607
‘புள்ளும்
உரிய அப்பெயர்க்கு என்ப.’
- 608
‘பேடையும்
பெடையும் நாடின் ஒன்றும்.’
- 609
அளகு
:
‘கோழி கூகை ஆயிரண்டு அல்லவை
சூழுங் காலை அளகுஎனல் அமையா.’
- 610
|