354                      இலக
354 

  இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 ஒத்த நூற்பா

முழுதும் - தொல். பொ. 558 பே.

                             157

                          

     புல், மரன் இவற்றின் உறுப்புக்கள்

 

  918.    புறக்கா ழனவே புல்என மொழிப.           

(158)

 

  919.    அகக்கா ழனவே மரமென மொழிப.             

(159)

 

  920.    தோடே மடலே ஓலை என்றா

         ஏடே இதழே பாளை என்றா

         ஈர்க்கே குலைஎன நேர்ந்தன பிறவும்

         புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.

 (160)

 

  921.    இலையே முறியே தளிரே தோடே

         சினையே குழையே பூவே அரும்பே

         நனைஉள் ளுறுத்த அனையவை எல்லாம்

         புல்லொடு வரூஉங் கிளவி என்ப.              

 (161)

 

  922.    காயே பழமே தோலே செதிளே

         வீழொடு என்றாங்கு அவையும் அன்ன.         

 (162)

 

இவ்வைந்து சூத்திரத்திற்கும் பொருள் வெளிப்படை.

 

விளக்கம்

 

     புறக்காழன எனவே உட்புறம் வெளிறு என்பது பெறப்படும். அவை
பனையும் தெங்கும் கமுகும் முதலியன. இருப்பையும் புளியும் ஆச்சாவும்
போல்வன மரம் எனப்படும். புறத்தும் அகத்தும் காழ்ப்பு இல்லாத கொடி
முதலாயின புல்லிலும், இடையிடையே காழ்ப்பின்றிக் காணப்படும் அகில்
முதலாயின மரத்துள்ளும் அடங்கும். ‘தோடே மடலே’ என்ற நூற்பாவில்
பிறவும் என்பதனால் குரும்பை, நுங்கு, நுகும்பு (சுருண்ட குருத்து, இளமடல்)
போல்வனவும் கொள்ளப்படும்.