பாட்டியல் - நூற்பா எண் 162, 163  355

 

       ‘இலையே தளிரே’ என்ற நூற்பாவில் அனையவை எல்லாம்
என்பதனான், புல்லும் தழையும் பொங்கரும் முதலாயினவும் கொள்ளப்படும்.
ஊகம்புல்லும் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியனவும் புழற்கால்ஆம்பல்
முதலியனவும் புல் எனப்பட்டடங்கி ஊகந்தோடு, சீழகந்தோடு எனப்
புல்லுறுப்பின் பெயர் பெறும் எனவும், பிடா காயா முதலிய புதலும், பிரம்பு
முதலாகிய கொடியும் மரம் எனப்பட்டு, பிடவிலை, காயாம்பூ, முல்லைப்பூ
என மரத்துறுப்பின் பெயர் பெறும் எனவும் கொள்ளப்படும். பிறப்பு
முறையான் தளிரை முற்கூறாது இலையை முற்கூறியதனால் புல்லினுள்
ஒருசாரன இலை எனவும் பூ எனவும் படும்.

    

   ‘காயே பழமே’
 

     தெங்கங்காய், வேப்பங்காய், தெங்கம்பழம், பலாப்பழம், பனந்தோல்,
வேப்பந்தோல், பனஞ்செதிள், வேப்பஞ்செதிள், தாழைவீழ், இத்திவீழ், எனக்
காய் முதலியன முறையே புல்லிற்கும் மரத்திற்கும் உரியவாய் வருகின்றமை
காண்க.

 

ஒத்த நூற்பாக்கள்

 

முழுதும் - தொல். பொ. 640 - 643 பே.    

 162

 

  தலைமைச்சொல் பற்றிய மரபு

 

  923. தலைமைக் குணச்சொலுந் தத்தமக்கு உரியதோர்

      நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துக என்ப.

 

இது நூன்மரபு நூல் இலக்கணத்தில் பெறப்பட்டமையின், எஞ்சி நின்ற
செய்யுள் மரபு கூறுகின்றது.

 

     இ - ள்: அரசர் உரிமைப்பண்பு உணர்த்தும் சொற்களை அவரவர்க்கு
ஏற்பச் செய்யுளகத்துக் கூறுக என்று சொல்வர் ஆசிரியர் என்றவாறு.