பாட்டியல் - நூற்பா எண் 163, 164

357


 

 ‘பசலையான் உணப்பட்டு’ என்றாற்போல உண்டற்கு உரிய அல்லாப் பொருளை உண்டனபோல உரைக்கும் மரபுவழுவமைதியை இந்நூற்பாவில் அடக்கியுள்ளார்.

 

ஒத்த நூற்பா

 

முழுதும் - தொல். பொருள். 630. பே

 

        ‘தானைத் தலைவரை ஏவல் பெற்றோரைத் தனிவெண்குடைக்

     கோனை அடுத்த பகைவரைக் கோறல் அக்கூற்றனவும்

     ஏனைக் குறுநில மன்னவர் தங்களை மன்னர்என்ன

     மானப் புகழ்தலும் செய்யுள் மொழியின் மரபு என்பரே.’

                                             - நவ. 79

                                                  163

அந்தணர் இயல்

 

  924.  நூலே கரகம் முக்கோல் மணையே

       ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய.

  இது நிறுத்த முறையானே வருணத்தின் மரபியல் கூறுகின்றது.

  பொருள் வெளிப்படை.                           

(164)

  விளக்கம்

 

  நிறுத்த முறை - பாட்டியல் முதல் நூற்பாவில் நிறுத்த முறை.

  முந்நூலும் குண்டிகையும் முக்கோலும் யாமைமணையும் போல்வன
அந்தணர்க்கு உரிய என்றவாறு.

     ‘ஆயுங்காலை’ என்றதனால் குடையும் செருப்பும் முதலாயினவும்
ஒப்பன அறிந்து கொள்க.

      இன்னும் ‘ஆயுங்காலை’ என்றதனால் ஒரு கோலுடையார் ஆகிய
ஹம்ஸன், பரஹம்ஸன் என்ற இருவரும் உலகியல் நீங்கிய துறவறத்து
நின்றார் ஆகலின் அவர் உலகியலின் ஆராயப்படார் என்பதும்,