358                      இலக
358

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

உடையார் இருவரும் பிச்சை கொள்வாரும் பிறாண்டு இருந்து தமது
உண்பாரும் ஆகலின் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந்து
ஓதினார் என்பதும் கொள்ளப்படும்.

     

      நூல் பிறப்பு முறையானும் சிறப்பு முறையானும் முற்கூறப்பட்டது.

      அந்தணர் - அழகிய தண்ணளியை உடையார் - பரிமே.

      அந்தணர் - அந்தத்தை அணவுவார்;

                            அந்தம் - வேதாந்தம் - நச்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

முழுதும் - தொல். பொ. 625. பே.

 

     ‘குன்றாநூல் அங்கைமறை கோவணங்கோல் முத்தீயும்

     நன்றாய வேள்வி நளினமும் - அன்றிக்

     குடைசமிதை குண்டிகைபுல் கோத்திரம்என் றின்ன

     உடையாரை அந்தணரென் றுன்னு.’

                                   - வெண். பாட். பொ. 12

    ‘உன்னல் அரன்கழலை ஓங்கியசீர் அங்கிஅயன்

     என்னஉவ மித்தல் இவர்என்றே - நன்மறைகள்

     ஓதலே ஓதுவித்தல் வேட்டலே வேட்பித்தல்

     ஈதல் இரத்தலென் றேத்து.’        

- வெண். பாட். பொ. 13

    ‘கோல்குடை கோவணம் நான்மறை முத்தீக் குசைதருப்பை

     மால்கழல் வாழ்த்தல் இரண்டு பிறப்பு மணைசமிதை

     தோல்ஐந்து வேள்வி கரகம் அரவிந்தம் தொல்கோத்திரம்

     நூல்இரு மூன்றங்கம் அந்தணர்க்கு ஓதுவர் நூலவரே.’

                                            - நவ. 71

    ‘ஈதலும் வேட்டலும் ஓதலும் ஆங்கது இயற்றுவிப்பார்

    ஆதலும் அங்கி யமனோடு உவமையும் வல்லவர்எண்

    மாதவர் பூசுரர் என்றலும் நான்மறை யோர்க்குஉரிய.’

                                             - நவ. 72

                                                  164