360                      இலக
360  

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

     ‘ஏத்திய பூவைநிலை எல்லோன் கழல்வாழ்த்தல்

     காத்தல்முடி சூட்டல் களம்வேட்டல் - தீத்தொழில்கள்

     வெண்குடைசெங் கோல்கவரி வெற்றியரி யாசனமும்

     மண்குலவு மன்னர் வளம்.’                           

- வெண். பாட். பொ. 14

 

     ‘பூவைநிலை பகலோன் கழல் போற்றல் புனைதல்முடி

     தேவர் உவமை சிங்காசனம் செங்கோல் குடைகவரி

     காவல் நிகழ்த்தல் எரிவேட்டல் ஓதல் கலமுதல

     மேவல் அடுகளம் வேட்டல் பண்பாயின வேந்தர்கட்கே.’

                                          - நவ. 73

     ‘விளங்கிய நூல்கற்றல் வேத நெறிநின்று அறுசமயம்

     உளம்கொண்டு போற்றல் அமைச்சர் உரைகொளல் ஓர்ந்துகுடி

     தளர்ந்தன தாங்கல் முறைமை கோடாது தனம்பெருக்கல்

     அளந்து பெரும்படை சேர்த்தல் அரசர்க்கு அடுத்தனவே.’

                                               - நவ. 74

                                                     165

 

வணிகர் இயல்

 

926. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை

 

இதுவும் அது.  

                                  (166)

 

விளக்கம்

 

     ‘வைசிகன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப் பெறும்’ - உரை.

 

     ‘வணிகர்க்குத் தொழிலாகிய வணிக வாழ்க்கை உள்ளுறையாகச
செய்யுள் செய்தல் பெரும்பான்மையும் ஆம் என்றவாறு.- பேரா.
தொல்காப்பியனார் ‘பயறு உளுந்து கடுகு கடலை எள் கொள் அவரை
துவரை என்ற எண்வகை உணவுப் பண்டமும் செய்து
விளைத்தலும் அவர் கடன்’ என்ற கருத்துப்பட,

 

     ‘மெய்தெரி வகையின் எண்வகை உணவின்

     செய்தியும் வரையார் அப்பா லான’                     

- தொ. பொ. 633 பே.

 

என்ற நூற்பாவும் யாத்துள்ளார்.