பாட்டியல் - நூற்பா எண் 166,167  

361


 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தொல். பொ. 632 பே.

 

     ‘இறையஞ்சா தேருழல் வீத்தீதல் புரிந்து

     மறைகொண் டழல்வளர்த்து வாய்மை - பொறையுடைமை

     என்றிவையும் காத்து நிரைஓம்பல் என்பவே

     குன்றா வணிகர் குணம்.’                            

   - வெண். பாட். ஒ. 16

 

     ‘குணங்கோடாக் காத்தல் கொழுநிதிக்கோன் தன்னை

     வணங்கல் அவன்புகழே வாழ்த்தல் - அணங்கார்

     இடத்தேகி வாணிகத்தால் ஈட்டல்எரி வேட்டல்

     படைத்தோர் வணிகரென் பார்.’                         

 - வெண். பாட். ஒ. 17

 

     ‘இருபிறப்பு ஓதல் எரிவேட்டல் ஈதல் இருநிதியம்

     வருதிறத்தான் நல்ல வாணிபம் செய்தல் நிரைவளர்த்தல்

     பெருநிதிக் கேள்வனைப் பேணல் அவன்என்று பேசநிற்றல்

     உரிமைதப்பா வணிகர்க்கு இயல்பாம் என்பர் ஒண்ணுதலே.’

                                            - நவ. 75

     ‘உறுவது கோடல் வருபயன்தூக்கல் உழவின்தொழில்

     இறுவது அஞ்சாமை இடரில் தெருளுதல் ஈட்டுதற்கு

     நெறிபலபோதல் முனிவிலன் ஆதல் நிறைவளையாய்!

     குறிஎனல் ஆகும் குலவணி கருக்குக் குவலயத்தே.’

 ’’ 76

 

     ‘தன்மை ஆதல் முனிவிலன் ஆதல்

     இடன்அறிந்து ஒழுகல் பொழுதொடு புணர்தல்

     உறுவது தெரிதல் இறுவது அஞ்சாமை

     ஈட்டல் பகுத்தல் என்றுஇவை எட்டும்

     வாட்டம் இல்லா வணிகரது இயற்குணம்.’

                                           - திவா. 12 - 126

                                                       166

 

வேளாளர் இயல்

 

927. வேளாண் மாந்தர்க்கு உழுதுஊண் அல்லது

    இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.

 

இதுவும் அது.                                      

(167)