362                      இலக
36

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

விளக்கம்

 

     ‘வேளாண் மாந்தருக்குத் தொழில் உழவே.’  

      - உரை.

 

     ‘வேளாண் மாந்தர்’ பலவகைப்பட்ட தொழிலரேனும், உழுந் தொழிலே
பெரும்பான்மைத்து ஆகலான் அதனையே சிறப்பித்துச் சொல்லுதல் மரபு
என்றவாறு.

 

     நிரை காத்தலும் உழவுத் தொழிலும் வணிகர்க்குச் சிறுபான்மையன
ஆயினவாறுபோல வாணிகமும் வேளாளருக்குச் சிறுபான்மைத்தேனும்,
வாணிகமே வைசிகனுக்கும், உழுதொழிலே வேளாளனுக்கும் பெருவரவின
என்பது கொள்ளப்படும்’ என்பது பேராசிரியர் கருத்து.

 

ஒத்த நூற்பா

 

முழுதும் - தொல். பொ. 635 பே.

 

     ‘பார்திகழும் மூவர் பணித்த பணிஒழுகல்

     ஏருழுதல் ஈதல் பிழையாமை - பார்புகழக்

     கோட்ட மிலாமை ஒருமைக் குணம்பிறவும்

     காட்டினார் சூத்திரர்தம் கண்.’                        

   - வெண். பாட். ஒ. 18

 

     ‘திருந்திய நல்லறம் தீராத செம்மை ஒழுக்கம்மென்மை

     வருந்திய சுற்றத்தை ஆற்றுதல் மன்னர்க்கு இறைஇறுத்தல்

     பொருந்திய ஒற்றுமை கோடல் புகழும் வினைதொடங்கல்

     விருந்து புறந்தரல் வேளாண் குடிக்கு விளம்புவரே.’

                                          - நவ. 77

     ‘வாணிபம் செய்தல் உபகாரம் ஆசாரம் வாய்ந்தசெயல்

     பேணி உழுதல் இருபிறப் பாளர் நெறிவழுவா

     ஆணைவழி நிற்றல் ஆனிரை போற்றல் அகன்றஅல்குல்

     பூண்முலையாய் இவை வேளாண் குடிக்குப் புகன்றனரே.’

                                                  ’’     78

                                                       167