பாட்டியல்
- நூற்பா எண் 168 |
363 |
அந்தணருக்குச்
சிறப்புவிதி
928.
அந்த ணாளர்க்கு அரசுவரைவு இன்றே.
இஃது
அந்தணர்க்கு உரியதொரு சிறப்பு உரிமை கூறுகின்றது.
இ - ள்: அழகிய தட்பத்தினை உடைய வேதியர்க்கு
அரசுரிமை எய்த
நிற்றல் கடிதலின்று என்றவாறு. அந்தணர்
வேதாந்தத்தை அண்ணினோர்
என்றுமாம்.
(168)
விளக்கம்
அந்தணர் - அழகிய தட்பத்தினை உடையார் என்றார்
பரிமேலழகர்.
வேதாந்தத்தை அண்ணினோர் என்றார்
நச்சினார்க்கினியர்.
அரசர் இல்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டு
ஒழுகலும்
வரையப்படாது என்றவாறு.
மக்களைத் தின்ற மன்னவர்க்குப் பின்னை
மறையோரான் அரசு
தோற்றப்பட்டாற்போலக்
கொள்க. மக்களுக்கு இடையூறு பலவாக விளைத்த
வேனன்
என்ற அரசனை அழித்துத் தக்கவனை உண்டாக்கி அரசனாக்கினர்
அந்தணர் என்பது பாகவதச் செய்தி.
ஒத்த
நூற்பா
முழுதும் - தொ. பொ. 637.
168
புலவர்தம்
வகைகள்
929.
கவியே கமகன் வாதி வாக்கிஎனப்
புவிமேல் சொல்லும் புலவர் நால்வர்.
|