364
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
கவியாவான்
இலக்கணம்
930.
ஆக மதுரஞ் சித்திரம் அகலம்
பாவகை பாடுவோன் கவிஎனப் படுமே.
இவை
பொருள் வெளிப்படை
(169
- 170)
விளக்கம்
புலவர்கள் கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நான்கு
திறத்தார் ஆவர்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறத்தில்
வல்லவர் ஆதலின் புலவர்
எனப்பட்டனர்.
ஆசு முதலிய நால்வகைப் பாடல்களில் ஒரு வகையோ
பல வகையோ
யாவுமோ பாடும் ஆற்றலுடையவன் கவி. அவன்
எவ்வகையில்
மேம்பட்டவனோ அவ்வகையான் அடையடுத்து
ஆசு கவி, மதுர கவி, சித்திர
கவி, வித்தார கவி எனச்
சிறப்பிக்கப்படுவான் என்றவாறு.
ஒத்த
நூற்பா
‘ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம்
ஆகும் நாற்கவி அறையுங் காலே.’
- நவ. 55
‘வாய்ந்த கவிகமகன் வாதிவாக்கி வகைவனப்பும்
ஆய்ந்தவல் ஆசு மதுரமும் சித்ரவித் தாரமுமே
ஏய்ந்தகவி நான்கும் கள்ளக் கவிமுதல் ஈரிரண்டும்
... ...
.... ... இவைதேர்ந்து
கொள்ளே.’
- நவ. 85
‘ஆசு முதற்பா அவனியில் மெச்சப்
பாவினம் கொண்டும் பாடுவோன் கவியே.’
-
பி. ம. 51
‘கவியே கமகன் வாதி வாக்கிஎன்று
இவைஒரு நான்கும் புலமைக்கு இயல்பே.’
- மு. வீ. யா. ஒ. 60
169 - 170
|