366                      இலக
366

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

வாதி இலக்கணம்

 

932. ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டித்

    தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறுக்கும்

    வன்புடை யோனே வாதி ஆவான்.

 

இது வாதி இலக்கணம் கூறுகின்றது.

 

     இ - ள்: ஏதுவும் ஏதுவினால் சாதிக்கும் பொருளும் ஆகிய
அவ்விரண்டற்கும் திட்டாந்தமாகிய எடுத்துக்காட்டு முதலியன கொண்டு தன்
கோட்பாட்டினை நிறுவிப் பிறர் கோட்பாட்டினை மறுக்கும் உரனுடையோனே
வாதி ஆவான் என்றவாறு.

 (172)

 

விளக்கம்

 

     கோட்பாடு       -     மலையில் நெருப்புள்ளது என்பது.

    

     ஏது            -     புகை உண்மையால் என்பது.

 

     மேற்கோள்      -     புகை உள்ள இடத்தில் நெருப்பு உண்டு

என்பது.

 

     எடுத்துக்காட்டு   -     அடுக்களை போல என்பது.

 

     புகை உள்ள இடத்தில் நெருப்பு உண்டு என்பது அடுக்களையினால்
உணரப்படுதலில் புகை உள்ள இம்மலையில் நெருப்பு உண்டு; இன்று
என்பது பொருந்தாது என்று அறுதியிட்டுரைப்பது போல்வது.
 

     வாதம் செய்து பிறர் கருத்தை மறுத்துத் தன் கருத்தை உறுதி செய்யும்
அறிவாற்றல் உடையோனே வாதியாவான்.
 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘முறை மேற்கோள்,

     புல்லும் எடுத்துக்காட் டேது புகலுமவன்

     நல்வாதி என்றே நவில்.’             

- வென். பாட். செ. 45