பாட்டியல் - நூற்பா எண் 172, 173

367


 

     ‘கதம்படலின்றிக் கருதிய மேற்கோளும் ஏதுவும் தம்

     மதம்படக்கூறி எடுத்துக்காட்டு ஏற்றி அளவில்நெறி

     விதண்டை வாதம் சற்பம் என்னும் இவற்றின் மேலோர்உரைத்த

     மதங்கள் நெறிசெல்ல வல்லவர் வாதினில் வல்லவரே.’

 - நவ. 90

    ‘ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டிய

    தன்மையின் நன்கே தன்கோள் நிறீஇ

    வாதில் பிறர்கோள் மறுப்பவன் வாதி.’  

        - பி. ம. 53

    ‘ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டித்

    தன்கோள் நீறீஇப் பிறன்கோள் மறுப்போன்

    வாதி யாம்என வைக்கப் படுமே.’                         

  - மு. வீ. யா. ஒ. 63

                                                     172

 

வாக்கி இலக்கணம்

 

933. அறம் பொருள் இன்பம் வீடுஎன நான்கும்

    திறம்பாது இவரச் செஞ்சொல் கொண்டுஅருள்

    நோக்கி உரைப்போன் வாக்கி ஆவான்.

 

இது வாக்கி இலக்கணம் கூறுகின்றது.

 

     இ - ள்: அறமும் பொருளும் இன்பமும் இவற்றின் நிலையின்மையான்
எய்தும் வீடும் என்று சொல்லப்பட்ட நாற்பொருளினையும் மிகுதி குறைவு
உறாமல் கேட்போர் விரும்பச் செஞ்சொல் இலக்கணச்சொல் குறிப்புச்சொல்
என்னும் மூன்றனுள் செஞ்சொல் மிகுதி தோன்ற, உலகம் தவம் செய்து வீடு
பெற, உயிர்கள் மாட்டுக் கருணை கொண்டு கூறுவோன் வாக்கி ஆவான்
என்றவாறு.

 

     சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீடு கூறுமாறு
என்னை எனின், கேள்வி விமரிசம் பாவனை