பாட்டியல்
- நூற்பா எண் 173 - 175 |
369 |
‘அறம்முதல் நாற்பொருள் பயனும் அத்திறத்தில்
கேட்கவே திறம்படப் பாடுவோன் வாக்கி.’
- பி. ம. 54
‘அறம்பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும்
கேட்போர் வேட்ப இனியன கிளத்தும்
ஆற்றல் உடையோன் வாக்கியாம் எனலே.’
- மு. வீ. யா. ஒ. 64
173
சோரகவி,
சாத்துக்கவி, பிள்ளைக்கவி,
வெள்ளைக்கவி
இன்னார் என்பது
934. ஒருவன் பாவேறு ஒருவற்கு உரைத்து
வருமவன் சோர கவி; மற்று ஒருவன்
பாஇசைக்கு ஒப்ப மேவி உரைப்போன்
சாத்துக் கவிஎனப் பாத்தனர் புலவர்.
174
935. முன்னோர் பாடிய யாப்பினுள் கிடந்த
சின்மொழி கொண்டு செய்யுள் செய்யுந்
தன்மையன் பிள்ளைக் கவி; புன் மொழியால்
கரைவோன் வெள்ளைக் கவியா மென்க.
175
இவை
இரண்டு சூத்திரமும் பொருள் விளங்கக் கிடந்தன.
புலவர் இயல்
முற்றும்.
விளக்கம்
ஒருவன் பாடிய பாடலைத் தான் பாடியதாகக் கொண்டு
மற்றவனிடம் கூறிவருபவன் சோரகவி ஆவான்; ஒருவன்
பாடிய பாஇசைக்கு ஒப்பப் பொருந்திப்பாடுபவன் சாத்துக்கவி
ஆவான்.
சான்றோர் செய்யுள் அடிகள் பலவற்றை எடுத்துக்கொண்டு
தான் சிறிதளவு இயற்றிப் பாடல் அமைப்பவன்
பிள்ளைக்கவி ஆவான். கொச்சையான சொற்களைக்
கொண்டு பாடுவோன் வெள்ளைக்கவி ஆவான்.
|