370                      இலக
370

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பா

 

     ‘ஆர் ஒருவன் பாக்களை ஆங்கொருவ னுக்களிப்போன்

     சோர கவி, சார்த்(து) ஒலியின் சொல்லுபவன், - சீரிலாப்

     பிள்ளைக் கவி சிறந்த பின்மொழிக்காம்; புன்மொழிக்காம்

     வெள்ளைக் கவி யவனின் வேறு.’                      

 - வெண். பாட். செ. 48

 

     [ஒருவன் பாட்டை மற்றொருவனுக்கு கொடுப்போன் கள்ளக் கவியாம்.
ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுள் புணர்ப்போன் சார்த்துக் கவியாம்.
தனக்கென ஒன்றின்றி முன்னோர் மொழிந்த சொல் நடை பொருள் நடை
கண்டு கவிபாடுவோன் பிள்ளைக்கவியாம். புன்மொழிகளால் ஒன்றும்
கவிபாடுவோன் வெள்ளைக் கவியாம்.]

                                             174 - 175

 

நல்லவை நிறையவை இலக்கணம்

 

936. ஆறுஉட் பகைசெற்று அருங்கலை ஓர்ந்து

    பாரில் கீர்த்தி படைத்தோர் வைகுதல்

    நல்லவை; அடக்கம் வாய்மை நடுநிலை

    சொல்லும் நன்மை உடையோர் தொகைஇ

    வல்லார் மொழியினும் வல்லுநர் ஆக்கிக்

    கேட்போர் உறைஅவை நிறைஅவை ஆகும்.

 

இது நல்லவை நிறையவை இரண்டன் இயல்பும் கூறுகின்றது.
 

     இ - ள்: காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம்
என்னும் உட்பகை ஆறனையும் அடக்கி, அரியவாகிய அறுபத்துநாலு
கலைகளையும் ஐயம் திரிபு  அறஆராய்ந்து, அதனால் புவியின்கண் பிறத்தற்

பயனாகிய புகழ்பெற்றோர் இருக்கலுறும் அவை நன்மையுடைய அவையாம்.