பாட்டியல்
- நூற்பா எண் 178 |
375 |
‘இயல்
இசை நாடகம் மெய்யே உணர்ந்தோர்கள் எப்பொருளும்
மயலற
ஆய்ந்தோர் வருணங்கள் நான்கினும் வந்து உதித்தோர்
உயர்நெறி
நின்றோர் அவையை உற்றோர் ஒரு தெய்வத்தையே
முயல்தரு
சித்தத்தர் செய்யுள்முன் பாட மொழிந்தனரே.’
- நவ. 93
‘இருபதிற்
றாண்டினில் ஏறி எழுபதில் ஏறலின்றி
வருபரு
வத்தவர் வன்பிணி இல்லவர் மற்றுறுப்பில்
ஒருகுறை
வற்றவர் நாற்கவி வல்லவர் ஓங்குஅறத்தின்
பரிவுடை
யாளர்கள் செய்யுளின் பாடல்பகர்ந்தவரே.’
- நவ. 94
‘பாடுமுறை தொடர் செய்யுள் தெரிக்க வல்ல
பாவலன்நற் குணம்குலம்சீர் ஒழுக்கம் மேன்மை
நீடழகு சமயநூல் பிறநூல் மற்று
நிகழ்த்து நூல் இலக்கணநாற் கவியுள் ளானாய்,
நாடுறுப்பில் குறைவிலனாய்,
நோயி லானாய்,
நாற்பொருளும் உணர்ந்துகலை
தெளிந்து முப்பான்
கூடும்வயது இகழ்ந்துஎழுபான் வயதில் ஏறாக்
குறியுடைய னாகிலவன் கவிதை கொள்ளே.’
- சிதம். பாட். 44
‘பாடுமுறை செய்யுட் பாவின் விகற்பினைத்
தெளிந்துநூற் புலமையுட் செறிந்த அறிவின்
பாட வல்லபா வலன்தகு நலம்குணம்
தெய்வம் கொள்கை மேம்பாட்டு ஒழுக்கம்
செல்வம் மேன்மை உளனாய், உட்புறம்
அழகும் சமயநூல் பிறநூல் அறிந்து
உவக்கும்பிற பாடைநூல் இலக்கண நூலிவை
தேர்ந்து விரைவில் பாடும்நா வினனாய்,
உறுகண் உறுப்பில்
குறைவுநோய் இலனாய்,
நாற்பொருள் உணர்ந்து
கலைக்கு ஞானியாய்ச்
செப்பும் நான்கும் புலமைத் திறனே.’
- பி. ம. 50
178
|