376 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
அகலக்
கவி கொள்ளும் முறை
939.
செயிர்தீர் புலவன் செய்த செய்யுளை
உயர்தரு மன்றின், ஒளிமணி விளக்கொடு
மங்கலம் பொலிய மறையோர் வாழ்த்தத்
தொங்கல் கமழத் தூரியம் இயம்ப
அஞ்சொல் மாதர் செஞ்சொல்வாழ்த் தெடுக்க,
வெண்துகில்
புனைந்து, வேறு தவிசிட்டு,
எண்திசை பரவத்
தண்தமிழ் கொண்டு,
தண்ணடை மதாணி
தமனியங் களிறு
பண்அமை இரதம் பாய்பரி உதவி,
ஏழடி பின்போய்
மீள்வது, மூவர்
வாழ்தமிழ் நாடர்க்கு வகுத்தனர் புலவர்.
இஃது
அகலக் கவியைக் கொள்வோர் இலக்கணம் கூறுகின்றது.
இ - ள்: கற்கப்படா ஆசிரியனுக்கு ஓதிய குற்றத்தின்
நீங்கிக்
கற்கப்படும் ஆசிரியனுக்கு ஓதிய நற்குணங்களுடனே
இவ்வோத்தில் கூறிய
நற்குணங்களை எய்திய
புலவனால் செய்யப்பட்ட செய்யுளை நல்லவை
நிறையவையின்கண்
ஒளி கிளரும் அழகிய விளக்கத்தினோடும் ஏனை
எழுவகை மங்கலங்களும் பொலிய, நான்மறையோர் ஆசி
கூற, நாலவிட்ட
பூமாலைகள் நறுநாற்றத்தைச் செய்ய,
பலவகை வாத்தியத் தொகுதிகள்
ஒலிக்க, இனிய
சொல்லை உடைய மடவார்கள் செவ்விய சொற்களான்
வாழ்த்த, பாமகளை மணம் புணரும் திறத்தான் வெண்துகிலும்
வெண்
மலர்மாலையும் வெண்முத்து மாலையும் அலங்கரித்துக்
கொண்டு, விசித்திரத்
தவிசின் இருந்து, பாமகளைப்
புணர்த்தும் புலவனுக்கும் அவ்வாறு வேறு ஒரு
தவிசு இட்டு,
எட்டுத்
|