பாட்டியல் - நூற்பா எண் 179

377


 

      திசையின் உள்ளாரும் துதிக்கக் குளிர்ந்த பாமாலை சூடி மருத நிலத்து
உளவாகிய வளம் மாறாத ஊரும் பெரிய ஆபரணமும் பொன்னும் மத வேழமும்
உறுப்பான் அமைவு பெற்ற தேரும் செறுநர் மேல்தாவும் குதிரையும் பாடிய
புலவற்குப் பரிசிலாகக் கொடுத்து, ஏழடி புலவன் பின் போய் மீளுதல் நாவலந்தண்
பொழில் வரைப்பின் மூவேந்தரும் வாழ்வு பெற்ற வடவேங்கடம் தென்குமரி
எல்லைக்கண் உளதாகிய தமிழ் நாட்டகத்தின் அகலக் கவியைக் கொள்வோர்க்கு
வகுத்த உரிமைத் திறமாம் என்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

    ‘படைநவின்ற பாய்மாவும் பண்அமைந்த தேரும்

    நடைநவின்ற வெல்பரியும் நல்கி - கடைஇறந்து

    முன்வந்த மன்னர் முடிபரிக்கும் சேவடியால்

    பின்வந்தான் பேரருளி னான்.’                         

- பு. வெ. பா. 26

 

 எனப் பிறரும் கூறினார்.

 

     மூவரும் என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது.    

                                                                      (179)

 

விளக்கம்

 

     அட்டமங்கலங்கள் - கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு,
பதாகை இணைக்கயல் என்பன. சிங்கம் எருது யானை குடம் ஆலவட்டம் கொடி
பேரி தீபிகை எனினும் ஆம். முன்னர்க் கூறியனவே எல்லோருக்கும் ஏற்றவை.

 

     மூவரும் - சேர பாண்டிய சோழர் என்ற தமிழக முடிமன்னர்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘சாந்தின் மெழுகித் தரளத் திரள்பரப்பிக்

     காந்தி மணிகனகம் கண்ணுறீஇ - வாய்ந்தலர்ந்த

     தாமமும் நாற்றி விளக்கிட்டுச் சால்தவிசில்

     நாமகளை ஏற்றுவித்தல் நன்கு.’                           

- வெ. பா. பொ. 29