378 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘புகழ்ந்த நன்னாளில் புகன்ற முகுர்த்தத்தில்
புள்பொருந்தில்
திகழ்ந்தநன் மங்கலம் சொல்லுதல் யாவும் தெரிந்துகொண்டு
பகர்ந்தவர் செய்யுளைப் பலகலைவாணர் தமக்குஉணர்த்தி
இகழ்ந்தன நீக்கி முறையே உரைத்தல் இயல்புஎன்பரே.’
- நவ. 97
‘நல்ல
மெழுகி இடம் விளக்கேற்றி நறுமலர்தூய்
நெல்லும்
பரப்பி அதன்மேல் விதானம் நிறைகுடமும்
பல்வகை
யான பிரப்பும் கொணர்ந்து பயனறிய
வல்லவர்
கூடிக் கலைமங்கை பாதம் வணங்குவரே.’
- நவ. 98
‘ஆங்குத்
தலைவன் பலபடி யானும் அலங்கரித்துப்
பாங்கில்
பொருந்தஅப் பாட்டியல் பாட்டினை நன்குஉணர்ந்து
பூங்கற்
கம்போல் நவமணி ஆடைகள் பொன்பொழிந்து
வாங்கிக்
கவிமுறை வந்தனை செய்தல் மரபுஎன்பரே.’
- நவ. 100
‘கொள்ளுமிடம் விதானித்துத் தொடையல் நாற்றிக்
கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பம்
துள்ளுபொரி விளக்கொளிர முரசி யம்பத்
தோகையர்பல் லாண்டிசைப்ப மறையோர் வாழ்த்த
வெள்ளைமலர்த் துகில்புனைந்து தவிசின் மேவி
வேறும்ஒரு தவிசிருத்திச் செய்யுள் கேட்டே
உள்ளமகிழ் பொன்புவிபூண் ஆடைமற்றும்
உதவிஏழ் அடிபுலவன் உடன்போய் மீள்க.’
- சித. பாட். 45
‘செய்யுள்
கொளும்இடம் சித்திரத் துகிலின்
ஆத்து
விதானித்து அலங்கல் நாற்றித்
தோரணம்
கதலி துவசம் உயர்த்திப்
பூரண
கும்பம் பொன்முளைப் பாலிகை
வெண்பொரி
தீபம் மிளிர்தரச் சமைத்து
|