பாட்டியல்
- நூற்பா எண் 180 |
381 |
‘தொடர்ந்துசெயாது உளம்நொந்தால் சுற்றத்
தோடும்
தொலைவன்; இஃது உண்மை; அகத் தியன்தன் சொல்லே.’
- சித. பாட். 46
‘அகத்தியன்சொல் எழுத்துமுதல் குற்றம் செய்யுட்கு
அடையாமல் தொடைகொண்டால் அடையும் செல்வம்;
மகத்துயர்நோய் அகலும்; அக லாது சுற்றம்;
வாணாளும் அதிகம்; வழிமரபும் நீடும்;
தொகைக்குற்றம் பாட்டுறில் செல்வம்போம்;
நோயாம்;
சுற்றம்அறும்; மரணம்உறும்; சோரும் காலும்;
சகத்தவர்க்குஈது அன்றியே, தேவர்க்கு ஆகின்
தப்பாதுஇப் பலன்கவிதை சாற்றி னார்க்கே.’
-
சித. பாட். 47
பரிசில்
வழங்காதவன் அழிவு :
‘கொள்ளான் பனுவலைக் கொள்வேன் தனக்குப்
பெயர்முத லவற்றைப் பெயர்த்தும் அழித்தும்
மீட்டுஒரு பேரின் விரைந்து அதில்சேர்த்தி
மொழிந்த வழுக்களான் முன்மொழி எடுத்து
வைத்துஅவன் இயற்பெயர் தோறும் மாளச்
செய்யுள் பெயர்த்துச் செந்நூல் சுற்றி
அதன்மிசைச் செம்மலர் அணிவுறச் சாற்றிக்
கவர்தெருப் புறத்தும் காளிகோட் டத்தினும்
பாழ்மனை அகத்தும் பழுத்த இரும்பினால்
ஆங்கவன் தனைநினைந்து அகம்நொந்து சுடினே
ஈராறு திங்களின் இறுதி யாவன்;
இங்ஙனம் இயற்றாது
இதயம் நொந்துகொண்டு
இருக்கினும் கிளையொடும்இறுதி யாவன் என்று
ஓதியது அகத்தியர் உண்மைநூல் நெறியே.’
- பி. ம. 58
|