382                       இலக
382

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

குற்றமற்ற பாடல் கோடலின் பயன் :

 

     ‘எழுத்து முதலிய இலக்கணம் ஐந்தினும்

     மங்கலம் முதலாய் வகுத்தமுன் மொழியினும்

     சான்றோர் விதித்த தன்மையின் வழுவாது

     தொடையின் முறையில் நிற்கக் கேட்கச்

     செல்வமும் கீர்த்தியும் சிறக்கும்: வாழ்நாள்

     திருமகப் பேற்றொடு தருமம் உடைத்தாய்

     மனத்துயர் நோயின்றி மரபும் நீடும்.’                         

     - பி. ம. 59

 

குற்றமுடைய பாடல் கோடலின் பயன் :

 

    ‘வழுவுறத் தொடுக்கும் அக்கவி கேட்கின்

     செல்வம் அகலும்; தீரா நோய்உறும்;

     சுற்றமும் புகழும் சூனிய மாகும்;

     கால மிருத்தும் கடுகி வந்திடும்;

     பாதிப் பயன்கவி சாற்றின வருக்கே.’                             

- பி. ம. 60

                                                                       180

அதிகாரப் புறனடை

 

941.  பன்முகம் கொண்டு பரந்த பொருளைச்

    சொல்முகத் தான்அவை துணைமை எய்தக்

    கூறற்கு அரிய ஆயினும், கூறிய

    பொருளொடும் இனத்தொடுந் தெருள்உற அமைத்துச்

    சொல்ல வல்லுநர் எல்லையின் விளங்கிக்

    கலைமக ளொடுந்திரு நிலைபெற வாழ்வர்

    மலைமகள் ஒருபால் மணந்தான் எனவே.

 

     இஃது இவ்வதிகாரத்திற்கு ஒரு புறனடை கூறுகின்றது.