72                      இலக

72                

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

   

 அற்றேல், மரபு இலக்கணமும் வருணத்து இலக்கணமும் புலவர்
 இலக்கணமும் அவை இலக்கணமும் அகலக்கவியைப் பாடுவோர்
 இலக்கணமும் அதனைக் கொள்வோர் இலக்கணமும் பிறவும் உணர்த்துமாறு
 என்னை எனின், அது, பாட்டின் கண்ணவாகிய இலக்கணம் உணர்த்தித்
 தன்னோடு இயைபு இன்மை நீக்கித் தலைமை பற்றிய பெயராம்,
 வெண்குடைப் பெருவிறல் வழுதிபோல, என்க. அற்றேல், இவ்வியலோடு
 செய்யுளியற்கு வேற்றுமை என்னை எனின், அது செய்தல் செய்யுள்
 எனநின்று செய்யுள் செய்தல் இலக்கணமாயிற்று, பாய்தல் பாய்த்துள்,
 விக்கல் விக்குள் என்றாற்போல, என்க.
 

     இதனுள், இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், எஞ்சிய
 இலக்கணங்கள் இவைஎன அவற்றின் பெயரும் முறையும் தொகையும்
 கூறுகின்றது.

 

     இ-ள் : இவ்வதிகாரத்துள்ளும் முன் நின்ற இரண்டு அதிகாரத்துள்ளும்
 கூறாது ஒழிந்த இலக்கணங்கள் எல்லாவற்றையும் சொல்லுமிடத்து, மாத்திரை
 என்னும் உறுப்பு ஆதியாக யாப்புறுத்த பாட்டின்கண்ணவாகிய
 இலக்கணமும் நூலின்கண்ணவாகிய இலக்கணமும் உரையின்கண்ணவாகிய
 இலக்கணமும் பிசியின்கண்ணவாகிய இலக்கணமும், முதுசொற்கண்ணவாகிய
 இலக்கணமும் மந்திர வாய்மைக்கண்ணவாகிய இலக்கணமும்,
 குறிப்புமொழிக்கண்ணவாகிய இலக்கணத்துடனே, வழக்கு இடத்தும் செய்யுள்
 இடத்தும் நடக்கும் இருவகை மரபின் இலக்கணமும் நாற்புலவர்
 இலக்கணமும் அவை இலக்கணமும் அகலக்கவியைச் செய்து கொடுப்போர்