பாட்டியல் - நூற்பா எண் 1

 73


 

இலக்கணமும் அதனைக் கொள்வோர் இலக்கணமும் ஆகிய
பதினான்கனோடும் ஏற்பன பிறவுமாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
 

     பாட்டு முற்கூறப்பட்டது, ஆசிரிய அடியான் இற்ற சூத்திரம் செய்யுள்
 ஆதலானும், குறிப்புமொழி பாட்டின்கண்ண ஆதலானும் மேல் ஓத்தினோடு
 இயைபு உடைமையானும் என்க. ‘மாத்திரைமுதலா யாத்துஇனிது அமைத்த
 பாட்டு’ என்றதனால் போந்தது அளவியற் செய்யுள் எல்லா உறுப்பும்
 பெறும் என்றும், ஏனைச் செய்யுள் அவ்வாறு பெறாது குறையப்பெறும்
 என்றும் கூறியவாறாம். ‘குறிப்புரை இயலொடு’ என ஒடுக்கொடுத்தது
 பாட்டுமுதலிய ஏழும் படலத்து ஒழிபு எனவும், ஏனைய பிண்டத்து ஒழிபு
 எனவும் அறிதற்கு எனக்கொள்க. ‘மாத்திரைமுதலா யாத்து இனிது அமைத்த
 பாட்டு’ என்றது அநுவாதம். முதலாக என்பது முதலா எனச் செய்யுள்முடிபு
 எய்தி நின்றது. ஆசிரியர் என வெளிப்படாத எழுவாய் சொல்லெச்சமாக
 இசைந்தது.

 

     பிற இலக்கணங்களாவன நான்குபாவிற்கும் வருண உரிமையும் நில
 உரிமையும் நிற உரிமையும் நாள் உரிமையும் இராசி உரிமையும் கோள்
 உரிமையும் அக்கோள்கட்கு உரிய பூவும் சாந்தும் கலையும் அகலக்கவியைக்
 கொள்ளும் ஓரையும் என்றவாறு.            1

 

விளக்கம்

 

     நிறுத்தமுறை என்பது அகத்திணைஇயல் இரண்டாம் நூற்பாவில்,