பாட்டியல் - நூற்பா எண் 3
|
81 |
‘பேரெழுத்தின் சொல்லின் பொருளின் பெருங்கவியின்
சீரலங் காரத்தில் தெரிந்தொருவன் - நேர்கொடுத்த
உள்ளுறைக்(கு) அப்போது உரைப்பதனை ஆசு என்றார்
எள்ளாத நூலோர் எடுத்து.’
- வெண். பா. செ. 2
‘எடுத்த பொருளில் தொடுத்தஇன் பத்தில்
அடுத்த பொழுதில் பாடுவது ஆசே.’
- தொ. வி. 299.
‘பொருள்அடி பாஅணி முதலிய கொடுத்துப்
பாடுஎனப் பாடுவோ னேயாசு கவியே.’
- மு. வீ. யா. ஒ. 56
4
மதுரகவி
765. சொல்லும் பொருளும் சுவைபட நிறீஇச்
செல்வுழித் தொடையும் விகற்பமும் செறீஇ
உள்ளத் துள்ளே கொள்ளும் அமுதெனத்
தன்மை உவமை பின்வரு பெற்றியின்
உருவகம் முதலுற்று ஓசை பொலியப்
பாடுதல் மதுர கவிஎனப் படுமே.
இது நிறுத்த முறையானே மதுரகவி இலக்கணம் கூறுகின்றது.
இ - ள் : சொல்லிலக்கணத்தினும் பொருள் இலக்கணத்தினும்
சிதையாமல் மெய்ப்பாடு தோன்றக் கூறி அடிசேர்ந்து நடக்கும் இடத்து
முதல் தொடையும் விகற்பத்தொடையும் நெருங்கி, உய்த்து உணர்வோர்
மனத்தகத்து ஊறும் அமுதம் போலத் தன்மை உவமை உவமையும்
பொருளும் வேற்றுமை இன்றி ஒன்று என மாட்டிக் கூறும் உருவகம்
முதலிய அணிகளான் அலங்கரிக்கப்பட்டுக் கேட்போர் செவிக்கு இனிய
ஓசை மேற்பட்டுத் தோன்றப் பாடுவது மதுரகவியாம் என்றவாறு.
5
|