82
|
இலக்கண விளக்கம்
- பொருளதிகாரம் |
விளக்கம்
சொல் பொருள் யாப்பு அணி
மெய்ப்பாடு ஓசை யாவும் செம்மையுற
அமையும் பாடல் மதுரகவியாம்.
மெய்ப்பாடு : நகை முதலிய எட்டும்,
நடுவுநிலையும்.
முதல்தொடை : மோனை முதலிய ஐந்தும்
அந்தாதியும்
இரட்டையும் செந்தொடையும்.
விகற்பத்தொடை : இணை முதல்
முற்று ஈறாகியன.
‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’
என்ற பதிகத்தைப் பாடிய ஆழ்வார்
மதுரகவியார் என்று வழங்கப்படுதலும் நோக்குக. பாடலின் பயன்
மன
இன்பம். அதனைத் தருவது மதுரகவியாம்.
ஒத்த நூற்பாக்கள்
‘பொருளின் பொலிவும் சொல்லின் செல்வமும்
தொடையும் தொடைக்கண் விகற்பமும்
துதைந்த
உருவகம் முதலாம் அலங்காரம்
உட்கொண்டு
ஓசைப்பொலி வுற்று உணர்வோர்
உளங்கட்கு
பாக்கடல் அமுதம்போல் பாடுதல்
மதுரகவி.’
- திவா. 12 - 49
‘எடுத்த பொருளினோடு ஓசை
இனிதாய்
அடுத்தவைசெஞ் சொல்லாய்
அணியும் - தொடுத்த
தொடையும் விளங்க அவைதுதிப்பச்
சொல்லின்
இடமுடைய மாமதுர
யாப்பு.’
- வெண். பா. செ. 3
‘உடைப்பொருட் பொலிவும் உரிச்சொல் செல்வமும்
தொடைப்பொலி விகற்பமும்
தொடர்அணிச் சிறப்பும்
இசைபெற ஓசையும் இயலப் பாடி
வசையில வருங்கவி மதுரம்
ஆமே.’
- தொ. வி. 299
‘தொடையும் தொடையின் விகற்பமும்
செறியச்
சொற்சுவை பொருட்சுவை தோன்ற
உருவகம்
ஆதிய அணிகளோடு அணிபெறப்
பாடுவோன்
மதுர கவிஎன வழுத்தப் படுமே.’
- மு. வீ. யா. ஒ. 57
|