84                      இலக

84    

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

     பாத மயக்கே பாவின் புணர்ப்பே

     கூட சதுக்கம் கோமூத் திரியே

     ஓரினத்து எழுத்தால் உயர்ந்த பாட்டே

     ஒற்றுப் பெயர்த்தல் ஒருபொருட் பாட்டே

     சித்திரப் பாவே விசித்திரப் பாவே

     விகற்ப நடையே வினா உத்தரமே

     சருப்பதோ பத்திரம் சார்ந்த எழுத்தே

     வருக்கமும் மற்றும் வடநூற் கடலுள்

     ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி

     விரித்தும் மறைத்தும் மிறைக்கவிப் பாட்டு

     தெரித்துப் பாடுவது சித்திர கவியே.’                        

 - திவா. 12 - 50

     ‘யாப்புடைய மாலைமாற்று ஆதியா ஏனையவும்

     வாய்ப்புடைய சொல்லின் வகுத்தமைத்து - நீப்பிலா

     வண்ணமும் தொன்னூல் மரபும் வழுவாமல்

     பன்னுவது சித்திரத்தின் பா.’                            

 - வெண். பா. செ. 4

     ‘கோமூத் திரிமுதல் கூறிய மிறைக்கவி

     சித்திரம் என்பர் சிறுபான்மை அவைஎனப்

     பத்திரம் முதல்நுண் பத்தியில் பாடிச்

     சித்திரம் போல்வன சித்திர கவியே.’                         

- தொ. வி. 299

     ‘ஏக பாதம் எழுகூற் றிருக்கை

     காதை கரப்புக் கரந்துறை செய்யுள்

     கூட சதுக்கம் கோமூத் திரிமுதல்

     தெரிந்து பாடுவோன் சித்திர கவியே.’                    

- மு. வீ. யா. ஒ. 58

                                                                       6

வித்தாரகவி

 

767. வித்தார கவியை விளம்புங் காலை

    அத்திறம் தொடர்நிலை அடிபல நடக்கும்

    தனிப்பா என்னத் தான்இரண்டு ஆகும்.

 இது வித்தாரகவியின் பாகுபாடு கூறுகின்றது.