பாட்டியல் - நூற்பா எண் 7
|
85
|
இ - ள் : வித்தார
கவியைச் சொல்லும் இடத்துத் தொடர்நிலைப்
பாட்டு என்றும் பல அடியான் நடக்கும் தனிப்பாட்டு
என்றும்
இரண்டுகூறாம் என்றவாறு.
என்ன என்பதனைத்
தொடர்நிலை என்பதனோடும், பிரித்துக் கூட்டுக.
ஈண்டுக் கூறிய
அகலக்கவிக்கு இலக்கணம் ஆசிரியர்
தொல்காப்பியனார் கூறார் ஆயினார்; என்னை எனின், அவர்
‘வழக்கும் செய்யுளும்
ஆயிரு முதலின்
எழுத்தும்
சொல்லும் பொருளும் நாடி.’
-
தொல், சிறப்புப்பாயிரம்.
எனக் கருதிப் புகுதலானும்,
‘முன்னிலை
சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு
முடியினும் வரைநிலை இன்றே
யாற்றுப்படை
மருங்கின் போற்றல் வேண்டும்.’
-
தொல். சொ. 462.
என அகலக்கவியைச்
சொல்முடிபு கூறும் முகத்தான் கூறுதலானும்,
புறத்திணைக்கண்,
‘தாவில் நல்லிசை
கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய
துயில்எடை நிலையும்,
கூத்தரும்
பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி
உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம்
பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச்
சொன்ன பக்கமும்
சிறந்த நாளணி
செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின்
பெருமங் கலமும்,
சிறந்த சீர்த்தி
மண்ணுமங் கலமும்,
நடைமிகுத்து ஏத்திய
குடைநிழல் மரபும்,
|