86

86   

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


   

     மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமும்,

    மன்எயில் அழித்த மண்ணுமங் கலமும்,

    பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்,

    பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி

    நடைவயின் தோன்றும் இருவகை விடையும்,

    அச்சமும், உவகையும் எச்சம் இன்றி

    நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

    காலம் கண்ணிய ஓம்படை உளப்பட

    ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்

    காலம் மூன்றொடு கண்ணிய வருமே.’                     

- தொ. பொ. 91

 

என அகலக்கவியை விதந்து கூறுதலானும், செய்யுள் ஓத்தில்,

 

    ‘அகன்று பொருள்கிடப்பினும் அணுகிய நிலையினும்

     இயன்று பொருள்முடியத் தந்தனர் உணர்த்தல்

     மாட்டென மொழிப, பாட்டியல் வழக்கின்.’             

- தொல். பொ. 522

 

என்றதனால் பொருள் தொடர்நிலைச் செய்யுளும்,

 

    ‘மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி

     உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே.’

                                          - தொல். பொ. 523

 

என்றதனால் சொல்தொடர்நிலைச் செய்யுளும் பெறப்படூஉம் என்க.அவற்றைப் பின்னுள்ளோர் பலரும் பாட்டியல் என விரித்துக் கூறினார்ஆகலான், இந்நூல் உடையாரும் அகலக்கவிக்கு இலக்கணம் கூறினார் என்று
உணர்க.                           

7

விளக்கம்

 

      ‘தொடர்நிலை என்ன, அடிபல நடக்கும் தனிப்பா என்ன
அத்திறம்தான் இரண்டாகும்’ எனப் பிரித்துக்கூட்டிப் பொருள் கொள்க.
என்ன என்பது எண்இடைச்சொல்.