பாட்டியல்
- நூற்பா எண் 7
|
87
|
‘வழக்கும் செய்யுளும்’ என்புழிச் செய்யுள் எனவே தனிநிலைச்
செய்யுளும் தொடர்நிலைச் செய்யுளும்
பொதுவகையான் அடங்குதலானும்,
‘ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும்’ எனவே ஆற்றுப்படைச்
செய்யுட்கள் அவர் காலத்து இருந்தமை போதருதலானும், துயில் எடைநிலை,
கூத்தர் ஆற்றுப்படை, பாண்ஆற்றுப்படை,
பொருநர் ஆற்றுப்படை, விறலி
ஆற்றுப்படை, பெருமங்கலம், மண்ணுமங்கலம், குடைநிழல்மரபு, வாள்
மங்கலம், எயில் அழித்த மண்ணுமங்கலம், கடைக்கூட்டுநிலை,
இருவகைவிடை, ஓம்படை என்பன பற்றி
அகலக்கவி அமையுமாற்றைக்
குறிப்பால் சுட்டுதலானும், பாடல்கள் பல அடிகளாக வருதலை மாட்டு என்ற
உறுப்பினை விளக்கும் முகத்தான் குறிப்பிடுதலானும், தொல்காப்பியனார்
தனிப்பட்ட வகையில்
அகலக்கவிகளைச் சுட்டி அவற்றின் செய்யுள்
அமைப்புமுறை முதலியவற்றை விளக்காதுபோயினும் தம் காலத்திலேயே
அகலக்கவி பலவும் உளவாதலைச் சுட்டியுள்ளமை தேற்றம்.
பின்னுள்ளோர் - பன்னிருபாட்டியல் ஆசிரியர்கள், வெண்பாப்
பாட்டியல் ஆசிரியர்,
நவநீதப் பாட்டியல் ஆசிரியர், சிதம்பரப் பாட்டியல்
ஆசிரியர், பிரபந்த மரபியல் ஆசிரியர்
முதலியோரும் இவ்வாசிரியருக்குப்
பிற்பட்டவராக நாம் அறியும் தொன்னூல் - விளக்க ஆசிரியரும்
முத்துவீரிய
ஆசிரியரும் பிரபந்ததீபிகை ஆசிரியரும் முதலாயினார்.
ஒத்த நூற்பாக்கள்
‘ஒன்றே ஆகியும் ஒன்றுபல ஆகியும்
பலஒன்று ஆகியும் பாற்படும் இனமே.’
- பன். பாட். 157.
‘அவற்றுள்,
ஒன்றா கியஇனம் எனப்பட் டனஉலா
ஆற்றுப் படைவகைமடல் முதலாயின.’
- 158.
‘ஒன்றுபல ஆகிய இனம்அந் தாதி
கோவைகாப்பியம் ஆதியாக் கூறுவன.’
- 159.
|