New Page 1

88 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

     ‘பலஒன்று ஆகிய இனம்எனப் பட்டன

     கலித்தொகை குறுந்தொகை நெடுந்தொகை முதலன.’

- பன். பாட். 160.

 

     ‘பலஒன் றாகிய இனம்எனப் பட்டன

     கலம்பகம் மும்மணிக் கோவைமுத லாயின.’                              - 161.

 

     ‘மும்மணிக் கோவையும் பன்மணி மாலையும்

     மறமும் கலிவெண் பாட்டும் மடல்ஊர்ச்சியும்

     பாசண்டத் துறையும் கிரீடையும் கூத்தும்

     விருத்தக் கவிதையும் இயல்இசை நாடகத்தொடு

     விரித்துப் பாடுவது வித்தார கவியே.’                         

- திவா. 12 - 51

 

     ‘பாங்கார் தொடர்நிலைப்பாப் பல்பாதம் சேர்தனிப்பா

     ஈங்ககலப் பாக்கள் இரண்டாகும்; - ஆங்குத்

     தொடர்நிலைப்பா வின்விகற்பம், சூழ்வளையாய்! சொல்லின்,

     கடையிலவே என்றுரைத்தார் கண்டு.’

                                                    - வெண். பா. செ. 5.

 

     ‘தொடர்நிலை தொகைநிலை தொடுத்தபல் பாவும்

     தொடைபல வாகத் தொடுத்தஒரு பாவும்

     வித்தாரக் கவியென விளம்பினர் புலவர்.’

                                                        - தொ. வி. 299.

 

     ‘மறம்கலி வெண்பா மடலூர்தல் இயல்இசை

     பாசண் டத்துறை பன்மணி மாலை

     தசாங்கம் மும்மணிக் கோவை கிரீடை

     இவைமுத லியவிரித்து இசைத்துப் பாடுவோன்

     வித்தா ரக்கவி யாம்விளம் பிடினே.’                    

- மு. வீ. யா. ஒ. 59

                                                                       7

தொடர்நிலைச் செய்யுள்

 

768. அவற்றுள்,

    தொடர்நிலை விகற்பம் கடையில என்ப.

 

இது முதற்கண் நின்ற தொடர்நிலைச் செய்யுட்கு ஆவதொரு புறனடை கூறுகின்றது.