90
|
இலக்கணம் விளக்கம் - பொருளதிகாரம் |
‘பொருட்டொடர் நிலையே
புகலின் காப்பியம்
பெருங்காப் பியமெனப் பிரிவிரண்டு; அவற்றுள்
காப்பியம் அறம்முதல் நான்கில் குறைநவும்
புராணம் பல்கதை புனைநவும் என்ப.’
-
தொ. வி. 255.
ஏனைய செய்திகளை அணியியலில் காண்க.
8
பொருத்தம் பத்து என்பது
769. விரித்தபா மகட்கும் வேட்கும் இறைக்கும்
பொருத்தம்ஈ ரைந்தும் போற்றல் வேண்டும்.
இது, மேல் வகுத்துக்கொண்ட அகலக்கவிக்கு இன்றியமையாச் சிறப்புக் கூறுகின்றது.
இ - ள் : மேற்கூறிப்போந்த துறைப்பொருளை விரித்துக்கூறும்
பாமடந்தைக்கும் அப் பாமகளை மணம் புணரும் தலைவனுக்கும் பொருத்தம்
பத்தும் சிதையாமல் பாதுகாத்துச் சொல்லுதலை விரும்பும் ஆசிரியன்
என்றவாறு.
9
விளக்கம்
அகலக்கவியைத் தொடங்குங்கால் அதன் முதல்பாட்டின் முதற்சீர்க்கும்
பாட்டுடைத்தலைவன் பெயருக்கும் பொருத்தங்கள் பத்து அமைதல்
வேண்டும் - என்ற கொள்கை தொல்காப்பியனாருக்குப் பிற்பட்ட காலத்திலே
நாட்டில் நிலவவே, பாட்டியல் நூல்கள் பலவும் இப்பத்துப்
பொருத்தங்களையும் குறிப்பிடத் தொடங்கிவிட்டன. பாட்டுடைத்தலைவன்
புலவன் தன்மீது இயற்றிய அகலக்கவியைக் கோடலைப் பாமகளை மணம்
செய்து கோடலாகவே கருதும் மரபு ஏற்பட்டுவிட்டது.
சீவகன் கல்வி பயிலத் தொடங்கிய செய்தி,
‘குழைமுக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்க லுற்றார்.’
-
சிந்தா. 368.
என்றே கூறப்படுமாற்றையும் அறிக.
9
|