பாட்டியல் - நூற்பா எண் 10
|
91
|
பத்துப் பொருத்தங்கள்
770. மங்கலம் சொல்பால் வருணம் உண்டி
தானம்அக் கரம்நாள் தப்பாக் கதிகணம்
ஆனஈ ரைந்தும் அம்முதல் சீர்க்குப்
பொருத்தம் என்னத் தெரித்தனர் புலவர்.
இது வித்தாரகவிக்கு வேண்டுவன இவை எனத் தொகுத்துக் கூறுகின்றது.
இ - ள் : மங்கலமும் சொல்லும் பாலும் வருணமும் உண்டியும்
தானமும் எழுத்தும் நாளும் தவறாதகதியும் கணமும் ஆகிய பத்தும்
அகலக்கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் எனத்
தெரிந்து கூறுவர் புலவர் என்றவாறு.
ஆகுபெயரான் மங்கலச்சொல்லை மங்கலம் என்றார்.
10
ஒத்த நூற்பாக்கள்
‘ஏத்திய ஓத்தியல் எழுத்தியல் இயம்பின்
பிறப்பும் வருணமும் சிறப்பாம் கதியும்
இருவகை உண்டியும் மூவகைப் பாலும்
பொருவில் தானமும் கன்னலும் புள்ளும்
நயம்பெறு நாளும் இயம்புதல் கடனே.
- பன். பாட். 1
‘தொகுத்துரைத்த மங்கலம் சொல்எழுத்துத் தானம்
வகுத்தபால் உண்டி வருணம் - பகுத்தநாள்
தப்பாக் கதிகணம் என் (று) ஈரைந்தின் தன்மையினைச்
செப்புவதாம் முன்மொழியின் சீர்.’
- வெண். பாட். 1
‘மங்கலம் சொல்எழுத்து ஒன்றிய தானம் வரும்இருபால்
பொங்கிய உண்டி வருணம் பகுத்திடு நாள்பொருத்தம்
தங்கிய நாற்கதி எண்கணம் என்று தமிழ்தெரிந்தோர்
இங்குஇவை பத்தும் முதல்மொழிக்கு ஆம்என்று இயம்பினரே.’
- நவ. 2
|