New Page 1

92          

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

     ‘விளக்கிய மங்கலமே முதலாக விரித்த பத்தும்

     துளக்கற நாடும் பொருத்தமன்றே.’                           

- வரை. பாட். 3

 

     ‘பகர்செய்யுள் மங்கலம்சொல் எழுத்துத் தானம்

         பால்உண்டி வருணம்நாள் கதியே என்றா

     புகரில்கணம் எனப்பத்தும் பிறங்கு கேள்விப்

         புலவர்புகழ் முன்மொழிக்குப் புகல்வர்.’

                                                           

- சிதம். பாட். 17

 

     ‘முதல்மொழிப் பொருத்தம் தந்திடுங் காலை

     மங்கலம் சொல்எழுத்துத் தானம் பால்உணா

     கங்கில் வருணம்நாள் கதிகணம் ஈரைந்தே.’

                                                            

- தொ. வி. 284.

 

     ‘துகளறு மங்கலம் சொல்லுடன் எழுத்து

     தானம் பால்உணாச் சாதிநாள் கதி

     கணம்ஒரு பத்தும்முற் காணுவ பொருத்தம்.’

                                                           

- மு. வீ. யா. 65

                                                                        10

மங்கலச் சொற்கள்

 

771. சீர்பொன் பூமணி திங்கள் பரிதி

    கார்திரு எழுத்துக் கங்கை யானை

    கடல்நிலை மாஉல கம்சொல் நீர்தேர்

    அமுதம் புகழ்நிலம் ஆரணம் கடவுள்

    திகிரி பிறவும் செப்புமங் கலமே.

 

இது நிறுத்தமுறையானே முதற்கண் நின்ற மங்கல மொழி இவை என்கின்றது.

 

    இ - ள் : சீர் முதலாகத்திகிரி ஈறாக நின்ற இருபத்து நான்கு சொல்லும் அவை
போல்வன பிறவும் அகலக்கவிக்கு முதற்கண் நிற்கும் மங்கலச் சொற்களாம் என்றவாறு.