New Page 1

94        

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

 

     நாள் சொல் ஞெண்டு நாட்டிய பரி மலை

     கருடன் அருந்ததி மற்றிவை என்ப

     நிலைபெறு மங்கல நெறிநிற் பனவே.’

                             - பொய்கையார். பன். பாட். 134

 

     ‘செப்பிய உடம்பொடு சேராது உயிர்முதல்

     நிற்பன மக்கட்கு ஆம்என நேர்ந்திலர்;

     மற்றவை கடவுளர் முனிவர்க்கு ஆமே.’           

 ’’    135

 

     ‘உயிரொடு புணரா மென்மையும் இடைமையும்

     செயிரில் தீமையும் செப்பத் தகுமே.’                  

 ’’    136

 

     ‘ஓதிய மெய்யொடு புணராது உயிரெழுத்து

     ஆதியின் நிற்பின் ஆனந் தம்மே.’              

’’    137

 

     ‘உடம்பு பிரிஉயிர் சாதல் தானே.’               

’’    138

                                      - இந்திரகாளீயர்.

 

     ‘நரகரும் விலங்கும் அமுதொடு வரின்அவை

     புகரில என்ப புலமை யோரோ.’   - பரணர்.      

 ’’    139

 

     ‘சொல்லிய மரபின் மங்கலம் சிதைத்துப்

     புல்லுதல் குற்றம் பொருள்தலை மகற்கே.’         

’’    142

 

     ‘தொடுகழல் வேந்தன் துன்னா தோரும்

     வடுஅறு பரிசில் வழங்கா தோரும்

     கெடுதல் வேண்டிச் சிதைத்தலும் உரித்தே.’             

’’    143

 

     ‘திருவே பூவே திங்கள் ஞாயிறு

     கடலே மலையே கார்மழை பசும்பொன்

     மணியே மாநிலம் வருபுனல் அமிழ்தம்

     தேர்பரி களிறு சீர்முதல் என்றிவை

     போல்வன பிறவும் புகழ்ந்தநற் சொல்லே.’    

  - பன். பாட்.

 

     ‘திருப்பொன் கடலே தேர்பரி களிறே

     பொருப்பே மணிப்பூப் புகழ்இவை பிறவும்

     வந்தன விதிக்கும் மங்கலச் சொல்லே.’            

’’