பாட்டியல் - நூற்பா எண் 11
|
95
|
‘சீரெழுத்துப் பொன்பூ திருமணிநீர் திங்கள்சொல்
கார்பரிதி யானை கடல்உலகம் - தேர்மலைமா
கங்கை நிலம்பிறவும் காண்தகைய முன்மொழிக்கு
மங்கலமாம் சொல்லின் வகை.’
- வெண். பாட். 2
சீர், எழுத்து
‘வருகின்ற மங்கலச் சொல்லினுள் சீர்கொள்க
வாய்ந்தகக்கா
அருகுஒன்று கிக்கீசொச் சோக்கள்நந் நாவொ
டடுத்தநிந்நீ
தருகின்ற யாவொடு வல்வாவிவ் வீப்பெயர்
தங்களுக்கு
முருகுஒன்று எழுத்துநுந் நூயூப் பெயர்க்கும்
மொழிய நன்றே.’
- வரை. பாட். 4
பொன் பூ
‘மொழிபொன்குக் கூவும்சௌ காரந்துத்தூவு
முரணிதெத்தே
அழிவில்நெந் நேயொடு புப்பூமெம் மேயொ
டகன்றமொம்மோ
வழுவில்மௌ காரப் பெயர்க்குரை பூக்கொண்
டிசைக்ககௌசை
வழிகொள்மம் மாமிம்மீ மும்மூவை காரவௌ
காரங்கட்கே.’
- வரை. பாட். 5
திரு திங்கள் மணி
நீர்
‘வௌவும் திருத்திங்கள் என்சொற்கள் கொக்கோ
வரும்பெயர்க்காம்
‘செவ்வுள் மணிச்சொல்கெக் கேப்பெயர்க் காம்செழு
நீர்ச்சொற்கு ஐஓடு
இவ்வுள்சிச் சீயொடு தித்தீத்தை நெந்நோ
வுடன் இசையக்
கௌவும்பை காரப் பெயர்க்குநன் றாம்படி
கட்டுரையே.’
- வரை. பாட். 6
|