இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]19


அஃது ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை மற்றொரு
வேந்தன் ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக
அந்நாட்டிடத்தே சென்று வேறலைக் குறித்தது, எ - று.

      புறத்திணை பலவற்றுள் ‘
வஞ்சி தானே முல்லையது
புறனே
’ என இதனைப் பிரித்து ஓதினார், முதலெனப்பட்ட
காடுறையுலகமுங் கார்காலமும் அந்நிலத்திற்கு ஏற்ற
கருப்பொருளும் அரசன் பாசறைக்கட்டலைவியைப் பிரிந்திருத்தலும்
அவன் தலைவி அவனைப்பிரிந்து மனைவயினிருத்தலுமாகிய
உரிப்பொருளும் ஒப்பச்சேறலின் என்பது. எனவே வஞ்சித்திணை
முல்லைத்திணைக்குப் புறனென்றல் ஆணை
கூறலன்றாயிற்று.                                       (7)

                 வஞ்சித்திணையின் துறைகள்

       606. வாடா வஞ்சி மலைதலு மோடாப்
           படையியங் கரவமுங் குடைநாட் கோளும்
           வாணாட் கோளும் பேணா ருட்குங்
           கொற்றவை நிலையும் வெற்றிவே லுழவர்
           செய்தொழில் கூறிய மற்றதன் பகுதியு
           மறிதிரை யுலகம் வணங்கவெஃ குயர்த்த
           குரிசிலை வழுத்திய கொற்ற வஞ்சியும்
           வேந்தனைப் புகழ்ந்து வேற்றுநா டழிபு
           கூர்ந்தமைக் கிரங்கிய கொற்ற வள்ளையும்
           பொருமுறை பகையொடு பொருத வீரர்க்குப்
           பெரிதருள் சுரந்த பேராண் வஞ்சியு
           மருந்திறை யளப்ப வாறிய சினத்தொடு
           பெரும்பூண் மன்னவன் பெயர்ந்த பக்கமுந்
           திண்ணிய வேந்திற் சிறப்புற் றோர்பெறூஉம்
           வண்மை கூறிய மாராய வஞ்சியுஞ்
           செறியலர் போர்க்களஞ் சென்றுதன் னாண்மை
           நெறியெடுத் தியம்பிய நெடுமொழி வஞ்சியுந்
           தொன்னெறி மரபின் வாட்குடித் தோன்றிய
           முன்னவ னிலைபுகன் முதுமொழி வஞ்சியுங்
           கூடலர் நாட்டுக் கொடிநெடு வியலூ
           ரூடெரி யூட்டிய வுழபுல வஞ்சியுங்
           குறுகல ரருமுனை கொள்ளை சாற்றி
           மறுகுறக் கவர்ந்த மழபுல வஞ்சியு