(இ - ள்.) மேற்கூறிய புறத்திணை ஏழனுள் உழிஞைத் திணை
முற்கூறிய அகத்திணை ஏழனுள் மருதத்திணைக்குப்
புறனாம்; வேற்று
வேந்தன் குலத்திற்கெல்லாம் எஞ்சாத முதலாய் வருகின்ற அரணைச்
சென்றவேந்தன்
வளைந்து கோடலும் இருந்த வேந்தன் காத்துக்
கோடலுமென இரண்டு வகையினையுடைத்தாம் அத்திணையென்று
கூறுவர்
அறிந்தோர், எ - று.
புறத்திணை பலவற்றுள் ‘உழிஞைதானே மருதத்துப்புறனே’ என
இதனைப் பிரித்தோதினார், இருபெரு
வேந்தர் தம்முள் மாறு கொண்டவழி
எதிர்செலற்காற்றாது போய் மதிலகத்திருந்த வேந்தன்
மதில்
பெரும்பான்மையும் மருதத்திடத்ததாகலானும் அம் மதிலை முற்றுவோனும்
அந்நிலத்திருத்தலானும்,
ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருந்த
ஒப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட
விரும்புதலானும், மருதம்போல்
இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையானுஞ், சிறுபொழுதும்
விடியற்காலமே
போர்செய்தற்குக் காலமாதலானும் என்பது. எனவே,
உழிஞைத்திணை மருதத்திணைக்குப் புறனென்றல்
ஆணை
கூறலன்றாயிற்று. (9)
உழிஞை : அரண் முற்றல்
608. முடிமிசை யுழிஞை சூடி யொன்னார்
கொடிநுடங் கெயில்கொளக் குறித்த வுழிஞையுங்
குடைநாட் கோளொடு வாணாட் கோளுங்
கடைநாட் பௌவத் ததிர்முர சுழிஞையும்
பற்றலர் மதில்கொளப் பரந்தெழு தானையொடு
கொற்றவ னெழுதரு கொற்ற வுழிஞையு
மிகப்படு மூக்கமுதல் வேந்துறு தலினர
ணகப்படு மென்ற வரச வுழிஞையும்
வண்ண மலர்த்தார் மன்னனைச் சோவெறி
கண்ணனென் றேத்திய கந்தழி யுழிஞையு
மியங்கர ணழித்தன னிறையுமிது புனைந்தென
வயங்கிண ருழிஞையை வழுத்துமுற் றுழிஞையுங்
காந்தள் வேய்ந்தனன் சேந்தனும் போர்க்கெனின்
வேந்தரி லெவர்பூ விரும்பா ரென்றலு
மறத்துறை மலிந்து மண்டி மாற்றார்
விறற்கொடி மதிலின் புறத்தொருங் கிறுத்தலும்
|