36 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

     29. தொடர்ந்தெயில்கொண்டோன் சூழ்மதில்வேந்தன்
மடந்தையை வேண்டி மகட்பாலிகலுக்குச்
செய்யுள்:-

     “அந்தழை யல்குலு மாடமை மென்றோளும்
     பைந்தளிர் மேனியும் பாராட்டித்-தந்தை
     புறமதில் வைகும் புலம்பே தருமே
     மறமதின் மன்னன் மகள்”
                   [பு. வெ. உழி. 29]

எனவரும்.

     
30. தூவடிவேலவன் தொகுத்த நிதியளந்து சேவடிவணங்கத்
திறைகொண்டு பெயர்தற்குச்
செய்யுள்:-

     “கோடும் வயிரு மிசைப்பக் குழுமிளை
     யூடெரி வேய வுடன்றுலாஅய்ப்-பாடி
     யுயர்ந்தோங் கரணகத் தொன்னார் பணியப்
     பெயர்ந்தான் பெருந்தகையி னான்”
          [பு. வெ. உழி. 30]

எனவரும்.

    
31. பேணாமன்னர் பெருமறங்காற்றி ஆணைபோக்கி அடிப்பட
விருத்தற்குச்
செய்யுள்:-

    
“ஒன்றி யவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப
     வென்றி விளையா விழுமதிலோ-ரென்றும்
     பருந்தார் செருமலையப் பாடி பெயரா
     திருந்தா னிகன்மறவ ரேறு”
                 [பு. வெ. உழி. 31]

எனவரும்.

    
32. எம்மதிலுள்ள இகலுடைவேந்தரும் அம் மதிலடியின்
அடைந்த தொகைநிலைக்குச்
செய்யுள்:-

    
“நாவல் பெயரிய ஞாலத் தடியடைந்
     தேவ லெதிரா திகல்புரிந்த-காவலர்
     வின்னின்ற தானை விறல்வெய்யோற் கம்மதிலின்
     முன்னின் றவிந்தார் முரண்”
               [பு. வெ. உழி. 32]

எனவரும். (10)

                  
உழிஞை : அரண் காத்தல்

        609. ஏப்புழை ஞாயி லேந்துநிலை யரணங்
           காப்போர் நொச்சிப் பூப்புனை புகழ்ச்சியுந்
           துண்ணென வரூஉந் தூசு தாங்கி
 

    இ. வி.-23